உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடலோர காவல் படை இடத்தை ஆக்கிரமித்த வீடுகளுக்கு நோட்டீஸ்

கடலோர காவல் படை இடத்தை ஆக்கிரமித்த வீடுகளுக்கு நோட்டீஸ்

நங்கநல்லுார், இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வசிக்கும், 22 குடும்பத்தினருக்கு, நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று, நோட்டீஸ் வழங்கப்பட்டது.சென்னை, நங்கநல்லுார் அடுத்த தலக்கனஞ்சேரி கிராமம், சர்வே எண் 131ல் உள்ள 19 ஏக்கர் நிலம், ராணுவத்திற்கு சொந்தமானது. இந்த நிலம், கடந்த 2021ம் ஆண்டு, இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டது.அந்த சர்வே எண்ணில் உள்ள நிலத்தை அளந்து பார்த்த போது, ஒரு குறிப்பிட்ட இடத்தை ஆக்கிரமித்து ரகுபதி நகர், முதல் தெரு எனும் பெயரில், 22 வீடுகள் கட்டப்பட்டது கண்டறியப்பட்டது.அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றித் தரும்படி, கடலோர காவல் படை அதிகாரிகள், உயர் நீதிமன்றத்தை நாடினர். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி, இந்திய கடலோர காவல் படை கமாண்டன்ட் ஏ.கே.சுக்லா தலைமையில் காவல் படை வீரர்கள், ஆலந்துார் தாசில்தார் துளசிராம் மேற்பார்வையில், மீனம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீனிவாசன், பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் முரளி, பழவந்தாங்கல் இன்ஸ்பெக்டர் விமல் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் நேற்று, ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.இந்த நோட்டீசை சிலர், வாங்க மறுத்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்டவரின் வீட்டு சுவரில் ஒட்டிவிட்டுச் சென்றனர். 'லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகே, ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படும்' என, தாசில்தார் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ