உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பைக் - கார் மோதி விபத்து ஒருவர் பலி: நண்பர் சீரியஸ்

பைக் - கார் மோதி விபத்து ஒருவர் பலி: நண்பர் சீரியஸ்

மணலி, மணலி, நதியா நகரைச் சேர்ந்தவர் தனுஷ், 24, பெயின்டர். நேற்று முன்தினம் இரவு, தன் 'யமஹா - ஆர் 15' பைக்கில், மணலிபுதுநகரைச் சேர்ந்த நண்பர் சுரேஷ் பாபு, 40, என்பவருடன், முல்லை வாயல் - எஸ்.ஆர்.எப்., அரியலுார் சாலையில் சென்றார். அப்போது, எதிர்திசையில் அதிவேகமாக வந்த 'டாடா சுமோ' காரும் பைக்கும் மோதிக் கொண்டன. இதில், பைக்கை ஓட்டிச் சென்ற தனுஷ், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற நண்பர் சுரேஷ்பாபு படுகாயத்துடன் மீட்கப்பட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி