உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஸ்பின்னி பார்க் புது கிளை சோழிங்கநல்லுாரில் திறப்பு

ஸ்பின்னி பார்க் புது கிளை சோழிங்கநல்லுாரில் திறப்பு

சென்னை,இந்திய மோட்டார் வாகனச் சந்தையில், 2021ல் பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனையில் தடம் பதித்தது 'ஸ்பின்னி பார்க்' நிறுவனம். வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து, கடந்த மூன்று ஆண்டுகளில், நாடு முழுதும் 57க்கும் அதிகமான கிளைகளுடன் விரிவடைந்தது.அந்த வரிசையில், தமிழகத்தில் தன் 5வது கிளையை, சென்னை, சோழிங்கநல்லுார், ஓ.எம்.ஆர்., சாலையில், 2 ஏக்கர் பரப்பில், 400 கார்களை நிறுத்தும் வசதியோடு, பிரமாண்டமாக திறந்துள்ளது.இது குறித்து 'ஸ்பின்னி பார்க்' நிறுவன தலைமை செயல் அதிகாரி நீரஜ் சிங் மற்றும் சென்னை கிளை தலைமை பொறுப்பாளர் சரவணன் கூறியதாவது:பயன்படுத்திய கார்களை வாங்குவது மற்றும் விற்பது என, சொந்தமாக கார் பயன்படுத்துவோரின் 100 சதவீத நம்பிக்கையை எங்கள் 'ஸ்பின்னி பார்க்' நிறுவனம் பெற்று உள்ளது.ஒவ்வொரு காரும், 200 வித சோதனைகளைக் கடந்தே, வாடிக்கையாளர்களை சென்றடைகிறது. புதிய கார்களில்கூட இவ்விதமான தரச் சோதனை கிடையாது. தவிர, நாங்கள் விற்பனை செய்கிற அனைத்துவித கார்களுக்கும் ஓராண்டு உத்தரவாதமும் தரப்படுகிறது.இதனால், புது கார்களை வாங்க நினைப்போரும், எங்கள் கிளைகளில் விற்பனை செய்யப்படும் பயன்படுத்திய கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இது எங்கள் தரமான சேவைக்கு கிடைத்த மைல்கல் வெற்றி.துவங்கிய மூன்றே ஆண்டுகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்களை நாங்கள் விற்பனை செய்துள்ளோம். கடந்த இரண்டாண்டுகளில், தமிழகத்தில் மட்டும் 30,000 ஆடம்பர கார்களை விற்பனை செய்துள்ளோம்.இந்திய சந்தையில் துவங்கப்பட்ட மூன்று ஆண்டுகளில், மொத்த உள்நாட்டு சந்தை மதிப்பில் 54 சதவீத விற்பனையைப் பெற்றது, இத்துறையில் நாங்கள் செய்த புரட்சி.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை