உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நங்கநல்லுாரில் மழைநீர் வடிகால் பணிகளை வேகப்படுத்த உத்தரவு

நங்கநல்லுாரில் மழைநீர் வடிகால் பணிகளை வேகப்படுத்த உத்தரவு

நங்கநல்லுார், சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலம், 162வது வார்டு நங்கநல்லுார் பகுதியில் மழைநீர் வடிகால், மின் கேபிள் பதிப்பு பணிகள் நடந்து வருகின்றன. அப்பணிகள் தொய்வாக நடப்பதாக பொதுமக்கள் புகார் அளித்தனர்.இதையடுத்து, மண்டலக் குழு தலைவர் சந்திரன் தலைமையில் மண்டல பொறியாளர் ரவிராஜன், வார்டு கவுன்சிலர் சாலமோன் மற்றும் குடிநீர், மின்வாரிய அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று வார்டு முழுதும் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.இதில், மழைநீர் வடிகால் பணியில் ஆங்காங்கே இணைப்பு வழங்கப்படாமல் இருந்தது தெரியவந்தது. அவற்றை உடனடியாக இணைக்க உத்தரவிட்டனர். நீண்ட நாட்களாக நடக்கும் மின் கேபிள்கள் பதிப்பு பணியையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தினர்.வார்டு முழுதும் சிதிலமடைந்த சாலைகள் கணக்கெடுக்கப்பட்டு, மாநகராட்சியினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றவும் உத்தரவிடப்பட்டது. இந்த ஆய்வின்போது, அந்தந்த பகுதி நலச்சங்கத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை