பேன்சி ஸ்டோரில் தீ விபத்து
வேளச்சேரி, வேளச்சேரி, தண்டீஸ்வரம் பிரதான சாலையில் உள்ள ஒரு கட்டடத்தின் முதல் மாடியில், லதா என்ற பெயரில் பேன்சி ஸ்டோர் உள்ளது.தரைத்தளத்தில், நான்கு கடைகள், இரண்டாது மாடியில் ஆண்கள் விடுதி உள்ளது. நேற்று காலை, பேன்சி ஸ்டோர் ஊழியர் குமார், கடையை திறக்கும்போது உள்ளே இருந்து புகை வந்தது.சில நிமிடத்தில், கடையில் இருந்த பொருட்கள் கொழுந்துவிட்டு எரிந்தது. கிண்டி, வேளச்சேரி, மடிப்பாக்கம், சைதாப்பேட்டை தீயணைப்பு துறையினர், 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக இருந்ததால், நான்கு மணி நேரம், வேளச்சேரி பகுதி புகை மூட்டமாக மாறியது. இதில், கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் பகுதிவாசிகள் பாதிக்கப்பட்டனர்.வேளச்சேரி போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு என தெரிந்தது.வேறு எதாவது காரணம் இருக்குமோ என, போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.