உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீண்டும் மினிபஸ் சேவை  பயணியர் மகிழ்ச்சி

மீண்டும் மினிபஸ் சேவை  பயணியர் மகிழ்ச்சி

மாதவரம், நம் நாளிதழ் செய்தி எதிரொலியால், பழைய தடத்தில் மினி பஸ் இயக்கப்படுகிறது.சென்னை பெரம்பூரில் இருந்து, மூலக்கடை, தபால் பெட்டி, அலெக்ஸ் நகர் வழியாக அசிசி நகர் வரை, எஸ்-64, என்ற சிற்றுந்து இயக்கப்பட்டது. அலெக்ஸ் நகரில் சாலை அமைக்கும் பணிக்காக, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.அதனால், பால்பண்ணை சாலையில் இயக்கப்பட்டது. சாலை அமைக்கும் பணிகள் முடிந்த பிறகும், மாற்றம் செய்யப்பட்ட தடத்திலேயே இயக்கப்பட்டதால், அலெக்ஸ் நகர் மக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து, நேற்று முன்தினம், நமது நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, நேற்று முதல், அலெக்ஸ் நகர் வழியாக, பழைய தடத்தில் சிற்றுந்து இயக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை