மேலும் செய்திகள்
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை கோரி ஆர்ப்பாட்டம்
07-Oct-2025
நாளைய மின் தடை
07-Oct-2025
திருவொற்றியூர்:திருவொற்றியூர் - எண்ணுார் விரைவு சாலை, திருவொற்றியூர் குப்பம் பகுதியில், பிரசித்தி பெற்ற பட்டினத்தார் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், ஆடி மாதம் 5ம் நாள், உத்திராட நட்சத்திரத்தில், பட்டினத்தார் குருபூஜை நடைபெறும். அதன்படி, இவ்வாண்டு நாளை, பட்டினத்தார் திருநட்சத்திரத்தையொட்டி, குருபூஜை விழா நாளை நடக்கிறது. இதில், லிங்க வடிவமான பட்டினத்தார் சுவாமிக்கு, சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடக்கும். முன்னதாக, காலை 7:00 மணிக்கு, தியாகேச பெருமாள் ஆலயத்தில் இருந்து, பன்னிரு திருமுறையுடன், சற்குருநாதன் குழுவினரால், திருவீதி தேவார பாராயணத்துடன் பட்டினத்தார் ஆலயம் வந்தடைதல். தொடர்ந்து, 8:30 மணிக்கு, குணசேகரன் குழுவினர் மேளக் கச்சேரி, 9:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடக்கும்.
07-Oct-2025
07-Oct-2025