உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உள்வாங்கிய வடிகால் மூடி அச்சத்தில் பாதசாரிகள்

உள்வாங்கிய வடிகால் மூடி அச்சத்தில் பாதசாரிகள்

அடையாறு மண்டலம், 176வது வார்டு, சாஸ்திரி நகர், 9வது தெரு வழியாக, அடையாறு, எல்.பி., சாலை நோக்கி வாகனங்கள் செல்கின்றன. இந்த தெருவில், பள்ளி, மசூதி, வங்கி ஆகியவை அமைந்துள்ளன.இந்த தெருவில், மழைநீர் வடிகால் மூடி உள்வாங்கி, பல நாட்களாக சேதமடைந்துள்ளது. இதனால், சாலையோரமாக செல்லும் பாதசாரிகள், குழியில் விழும் அபாயம் உள்ளது. அப்பகுதி மக்கள், விபத்து ஏற்படாத வகையில், எச்சரிக்கை தடுப்பு அமைத்துள்ளனர். இந்த வடிகாலில் கழிவுநீர் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. வடிகால் மூடியை மாற்றி, பாதசாரிகள் அச்சமில்லாமல் நடக்க வழிவகை செய்ய வேண்டும்.லிங்கம், சாஸ்திரி நகர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ