உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ‛மருந்தகத்தில் திருடியவர் கைது

‛மருந்தகத்தில் திருடியவர் கைது

புழல்,புழல் அடுத்த விநாயகபுரம், கல்பாளையத்தில் மருந்தகம் நடத்தி வருபவர் செந்தில்குமார், 43.இந்த நிலையில், 3ம் தேதி இரவு, அவரது மெடிக்கல் ஷாப்பின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே வைத்திருந்த, 8 லட்சம் ரூபாய் திருடு போனது. இது குறித்து புழல் போலீசார் நடத்திய விசாரணையில், ஆதம்பாக்கம் கரிமேடு, 3வது தெருவை சேர்ந்த பெலிக்ஸ் ஜெயபால், 18, என்பவர் சிக்கினார்.நேற்று மாலை, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, 1.52 லட்சம் ரூபாய், ேஹாண்டா டியோ கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ