உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடிநீர் வீணாவதை தடுக்க பிளாஸ்டிக் குழாய் அமைப்பு

குடிநீர் வீணாவதை தடுக்க பிளாஸ்டிக் குழாய் அமைப்பு

ஆவடி:ஆவடி அடுத்த பட்டாபிராம், 20 வது வார்டு, தண்டரையில், வள்ளலார் நகர் பிரதான சாலை உள்ளது. இங்குள்ள வள்ளலார் நகர் ஐந்தாவது தெருவில், ஆழ்துளை கிணறு அமைத்து, அப்பகுதியில் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், வள்ளலார் நகர் ஐந்தாவது இணைப்பு தெரு மற்றும் ஏழாவது தெருவில், சில மாதங்களாக குழாய் உடைந்துள்ளது. நீர் கசியும் பகுதியில் துணி வைத்து அப்பகுதிவாசிகள் அடைத்துள்ளனர். இருப்பினும், தினமும் குடிநீர் சாக்கடையில் வழிந்து வீணாகி வந்தது.இது குறித்து நம் நாளிதழில், கடந்த 29 ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, ஐந்தாவது இணைப்பு தெருவில் நீர்க்கசிவு பகுதி சீரமைக்கப்பட்டுள்ளது. ஏழாவது தெருவில் துணி வைத்து அடைக்கப்பட்டு இருந்த பகுதியில், 'பிளாஸ்டிக்' குழாய் பொருத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ