உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுமிக்கு தொல்லை கூலி தொழிலாளிக்கு போக்சோ

சிறுமிக்கு தொல்லை கூலி தொழிலாளிக்கு போக்சோ

அண்ணா நகர், அண்ணா நகர் காவல் மாவட்டத்தில், பெற்றோருடன் வசிக்கும் 13 வயது சிறுமி, தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார். சிறுமியின் வீட்டில், கூலி தொழிலாளியான சதீஷ்குமார், 43, என்பவர் வாடகைக்கு குடியிருக்கிறார்.நேற்று முன்தினம் இரவு, சதீஷ்குமார் சிறுமியை மாடிக்கு அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி சத்தம் போட்டு அலறி அழுதுள்ளார். மாடிக்கு சென்ற பெற்றோர், சிறுமியை விசாரித்த போது, சதீஷ்குமார் தவறாக நடந்து கொண்டதாக கூறியுள்ளார்.பின், மாடியில் மறைந்திருந்த சதீஷ்குமாரை பிடித்து, அண்ணா நகர் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், சிறுமியிடம் சில்மிஷம் செய்ததை சதீஷ்குமார் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவர் மீது பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை சட்டமான 'போக்சோ' வழக்கு பதிந்து, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை