உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு போலீஸ் எஸ்.ஐ., மகன் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு போலீஸ் எஸ்.ஐ., மகன் கைது

சென்னை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 18வது நபராக, சென்னை ஆயுதப்படை எஸ்.ஐ.,யின் மகன் கைது செய்யப்பட்டார்.பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஹரிஹரன், அருள், மலர்க்கொடி என, ஐந்து வழக்கறிஞர்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று, 18வது நபராக, பெரம்பூரைச் சேர்ந்த பிரதீப், 28, என்பவர் கைது செய்யப்பட்டார். இவரது தந்தை திருநாவுக்கரசு, சென்னை ஆயுதப் படையில், எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருகிறார். பிரதீப் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்துள்ளார். இவரது நடவடிக்கை சரியில்லாததால், 2020ல், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.ரவுடி ஆற்காடு சுரேஷின் உறவினரான இவர், கொலையாளிகளுடன் சேர்ந்து, ஆம்ஸட்ராங் கொலைக்கு சதித் திட்டம் தீட்டியுள்ளார் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி