உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொது - கல்லுாரி பஸ் மோதி பள்ளி மாணவர் பலி

பொது - கல்லுாரி பஸ் மோதி பள்ளி மாணவர் பலி

மணப்பாக்கம், மணப்பாக்கம், தர்மராஜபுரத்தை சேர்ந்த சிதம்பரம் மகன் செல்வகுமார், 14; அதே பகுதி தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார்.நேற்று முன்தினம், செல்வகுமார் மற்றும் அவரது சகோதரியை வீட்டில் இருந்து 'டி.வி.எஸ்., ஜூபிடர்' இருசக்கர வாகனத்தில் ஏற்றிய, அவரது பெரியப்பா அர்ஜுன், 52, பள்ளிக்கு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.சத்யா நகர், திருவள்ளுவர் சாலையில், முன்னாள் சென்ற எஸ்.ஆர்.எம்., ஈஸ்வரி பொறியியல் கல்லுாரி வாகனத்தை முந்த முயன்றார். அப்போது, பைக் மீது பேருந்து மோதியது.இதில் நிலை தடுமாறி, பேருந்தின் இடது பின் பக்க சக்கரத்தின் அடியில் சிக்கிய செல்வகுமார், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அர்ஜுனும், மகளும் வலதுபுறம் விழுந்தததால் தோள், உடலில் காயங்களுடன் உயிர் தப்பினர்.பரங்கிமலை போக்குவரத்து போலீசார், மாணவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.மேலும் வழக்கு பதிந்து, கல்லுாரி பேருந்து ஓட்டுநரான அம்பத்துாரைச் சேர்ந்த மோசஸ், 41, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை