உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இறுதி ஊர்வலத்தில் ரகளை கர்ப்பிணி காயம்; 4 பேர் கைது

இறுதி ஊர்வலத்தில் ரகளை கர்ப்பிணி காயம்; 4 பேர் கைது

ஓட்டேரி, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சசிதரன். இவரது உறவினர் சதீஷின் தந்தை குமார் மறைந்ததை தொடர்ந்து, இறுதி ஊர்வலம் நேற்று முன்தினம் மாலை ஓட்டேரி பிரிக்ளின் சாலையில் சென்றது.அப்போது பட்டாசு வெடித்ததில், ஆட்டோவில் பயணித்த புரசைவாக்கத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், 32, அவரது மனைவி பவித்ரா ஆகியோர் மீது விழுந்தது. இதுகுறித்து, ஜெயச்சந்திரன் இறுதி ஊர்வலத்தில் வந்த சசிதரன், 32, மற்றும் கோபி, 41, ஆகியோரிடம் தட்டிக்கேட்க, இருதரப்புக்கும் கைகலப்பானது.இதில், ஜெயச்சந்திரனுக்கும் அவரது கர்ப்பிணி மனைவிக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர், நண்பர்கள் சஞ்சய், 22, ஜெகதீஸ்வரன், 22, ஆகியோருடன் சேர்ந்து, ஓட்டேரி சுடுகாட்டில் வைத்து தகராறில் ஈடுபட்டோரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், காயமடைந்த ஜெயச்சந்திரன், சசிதரன் மற்றும் கோபி ஆகியோர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.பாதிக்கப்பட்ட நான்கு மாத கர்ப்பிணி பவித்ரா, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரித்த தலைமைச் செயலக காலனி போலீசார், ஓட்டேரியைச் சேர்ந்த சசிதரனின் உறவினர்கள் சதீஷ், 39, சரவணன், 39, மற்றும் சஞ்சய், ஜெகதீஸ்வரன் ஆகியோரை, நேற்று மாலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை