உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லீஸ் வீட்டை காலி செய்ய மறுப்பு? தி.மு.க., பெண் நிர்வாகிக்கு வெட்டு! இருவர் கைது

லீஸ் வீட்டை காலி செய்ய மறுப்பு? தி.மு.க., பெண் நிர்வாகிக்கு வெட்டு! இருவர் கைது

ஆர்.கே.நகர்:தண்டையார்பேட்டை, நாவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சரசு, 53. இவர், தி.மு.க., 38வது வட்ட துணைச் செயலர். தற்போது வசித்து வரும் தண்டையார்பேட்டை, நாவலர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பை, வசந்தா என்பவரிடம், 1 லட்ச ரூபாய்க்கு குத்தகைக்கு எடுத்தார். குத்தகை முடிந்த நிலையில், வீட்டை காலி செய்ய சரசு மறுத்ததாக கூறப்படுகிறது.'மேலும், 50,000 ரூபாய் தருவதாகவும், வீட்டை தன் பெயரில் எழுதி தர வேண்டும்' என, சரசு கூறியதாக தெரிய வருகிறது. இதனால் இருதரப்பு இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 2ம் தேதி ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.போலீசார் இருதரப்பு இடையே சமரசம் பேசியதில், 'ஆகஸ்ட் இறுதிக்குள் வீட்டை காலி செய்வதாக' சரசு எழுதி கொடுத்து சென்றார். மீண்டும், இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணியளவில், வீட்டில் துாங்கி கொண்டிருந்த சரசுவை, நால்வர் கும்பல் கத்தியால் வெட்டி தப்பியது. இதில், படுகாயமடைந்து சரசுவை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இது தொடர்பாக, வசந்தாவின் மகன்களான மணி மற்றும் கணேசனை கைது செய்து, ஆர்.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ