உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பட்டினப்பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

பட்டினப்பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

பட்டினப்பாக்கம், பட்டினப்பாக்கத்தில், ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட உணவு கடைகளை, மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.சென்னை, பட்டினப்பாக்கம் லுாப் சாலையில், ஏராளமான மீன் கடைகள் இருந்தன. இவற்றால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சில மாதங்களுக்கு முன், மாநகராட்சி அதிகாரிகள் மீன் கடைகளை அகற்றினர்.இந்நிலையில் பட்டினப்பாக்கம், லுாப் சாலையில், திடீரென உணவக கடைகள் ஒன்றிரண்டு முளைத்தன. தற்போது இங்கு, நுாறுக்கும் மேற்பட்ட உணவு கடைகள் உள்ளன.கடற்கரைக்கு வருவோர், இங்குள்ள கடைகளில் சாப்பிட வரும் போது, தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்துகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்தது.இதையடுத்து, ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர். ஆனாலும், தொடர்ந்து கடைகள் நடத்தப்பட்டு வந்தன.இந்நிலையில் நேற்று காலை, 50க்கும் மேற்பட்ட உணவு கடைகளை, போலீசார் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை