மாநகராட்சி அலுவலக சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
தாம்பரம், மேற்கு தாம்பரம், முத்துரங்கம் முதலி தெருவில், தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் செயல்படுகிறது. பொதுமக்கள், அதிகாரிகள் என, தினமும் 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இச்சாலையில், மாநகராட்சி நுழைவாயில் வரை இருபுறத்தையும் ஆக்கிரமித்து, காய்கறி, பழம், பூ கடைகள் போடப்பட்டிருந்தன. இந்த கடைகளால், அச்சாலையில் 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது.இதையடுத்து, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 14 கடைகளை, மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். தற்போது, அங்கு நெரிசல் இல்லாததால், பொதுமக்களும், அதிகாரிகளும் இடையூறு எதுவுமின்றி செல்கின்றனர்.