உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாணுவம்பேட்டையில் மெட்ரோ வீடுகள் கட்டடங்கள் அகற்றம்

வாணுவம்பேட்டையில் மெட்ரோ வீடுகள் கட்டடங்கள் அகற்றம்

சென்னை, மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட வழித்தடத்தில் மாதவரம் - சிறுசேரி சிப்காட்; மாதவரம் - சோழிங்கநல்லுார் தடத்தில், மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடந்து வருகின்றன.இதில், மாதவரம் பால் பண்ணையில் துவங்கி அண்ணா நகர், ஆழ்வார் திருநகர், முகலிவாக்கம், ஆலந்துார், வாணுவம்பேட்டை, மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம் கூட்டுசாலை, பெரும்பாக்கம் வழியாக சோழிங்கநல்லுாரை அடையும் வகையில் பணிகள் நடக்கின்றன.மொத்தம், 48 ரயில் நிலையங்களை உடைய இந்த திட்டத்தில், முகலிவாக்கத்தில் இருந்து, புழுதிவாக்கம் வரை, 10 ரயில் நிலையங்களும், புழுதிவாக்கத்தில் இருந்து, சோழிங்கநல்லுார் வரை, 11 ரயில் நிலையங்களும் அமைய உள்ளன.கடந்த, 2021ல் துவங்கி, மெட்ரோ ரயில் துாண்கள், மேல்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.இதில், வாணுவம்பேட்டையில் ரயில் நிலையம் அமைக்க தேவையான நிலம், ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், அந்த இடங்களில் உள்ள கட்டடங்களை இடித்து அகற்றும் பணி நடந்து வருகிறது.அதேபோல், பரங்கிமலை - பூந்தமல்லி சாலையில், நில ஆர்ஜிதம் செய்யப்பட்ட இடங்களில் உள்ள கட்டடங்கள் இடித்து அகற்றும் பணி துவங்கியுள்ளது.இதன் வாயிலாக, இப்பகுதியில் நீண்ட நாட்களாக ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வு கிடைக்கும் என, வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ