உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அசுத்தமாகும் நடைபாதைகள் கழிப்பறை அமைக்க கோரிக்கை

அசுத்தமாகும் நடைபாதைகள் கழிப்பறை அமைக்க கோரிக்கை

சென்னை:சென்னை, தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட, 18 வார்டுகளிலும், நடைபாதை அசுத்தமாகும் இடங்கள் குறித்து, பட்டியல் தயாரிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, அசுத்தம் நடைபெறும் இடங்களில், கழிப்பறைகள் அமைக்கப்பட்டன. ஆனால், உரிய பராமரிப்பு இல்லாததால், இந்த கழிப்பறைகள் சிதிலமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டன.இதையடுத்து, அந்த கழிப்பறைகளை அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள், அவ்விடத்தில் புதிதாக கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் தற்போது, நடைபாதையில் நடக்க முடியாத அளவிற்கு, அசுத்தம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலை, சேப்பாக்கம் பெல்ஸ் சாலை, திருவல்லிக்கேணி வாலாஜா சாலை உள்ளிட்ட சாலைகளில், நடைபாதை அதிக அளவில் அசுத்தமாக காணப்படுகிறது.இதனால், பல லட்சம் ரூபாய் செலவில் நடைபாதை அமைத்தும், அவற்றை பாதசாரிகள் பயன்படுத்த முடியாமல் சாலையில் நடந்து செல்கின்றனர். நடைபாதை அசுத்தத்தால், தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடைபாதை அசுத்தத்தை தடுக்க, கழிப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி