உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இளைஞரை தாக்கிய 5 பேருக்கு காப்பு

இளைஞரை தாக்கிய 5 பேருக்கு காப்பு

பூந்தமல்லி, டீ கடையில் ஏற்பட்ட தகராறில், இளைஞரை தாக்கிய ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம், நேமம் பகுதியைச் சேர்ந்தவர் கவுதம், 30. இவர் நேற்று முன்தினம், நசரத்பேட்டை அருகே டீ கடையில், தன் நண்பர் சிவராஜ் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த, பூந்தமல்லி அருகே மேப்பூரைச் சேர்ந்த சச்சின், 28, என்பவருக்கும், கவுதமுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். உடனே, சச்சின் தன் நண்பர்களுக்கு மொபைல்போன் வாயிலாக தகவல் அளித்தார். அதன்படி அங்கு வந்த ஆறு பேர், கவுதமை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் நசரத்பேட்டை போலீசார், மேப்பூரைச் சேர்ந்த தீனா, 24, ஞானவேல், 21, மாதவன், 24, சிவகுமார், 24, தமிழ்வேந்தன், 25, ஆகிய ஐந்து பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். தலைமறைவான சச்சின், குணா ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ