உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சினிமா படப்பிடிப்பு கிடங்கில் தீ பகுதிவாசிகள் மூச்சு திணறல்

சினிமா படப்பிடிப்பு கிடங்கில் தீ பகுதிவாசிகள் மூச்சு திணறல்

விருகம்பாக்கம், விருகம்பாக்கம், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., குடியிருப்பு அருகே, தனியாருக்கு சொந்தமான இடத்தில், சினிமா செட் அமைக்கும் கிடங்கு உள்ளது.இங்கு, நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த கோயம்பேடு, மதுரவாயல், விருகம்பாக்கம், அசோக்நகர் தீயணைப்பு படையினர், தீயை அனைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மரச்சாமான்கள், செட் அமைக்கும் பொம்மைகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாயின. தீ விபத்து காரணம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.தீ விபத்தால், சுற்று வட்டார பகுதி முழுதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. சிலருக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை