உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பட்டாக்கத்திகளுடன் ரவுடிகள்: பெரம்பூர் பாலத்தில் ரகளை

பட்டாக்கத்திகளுடன் ரவுடிகள்: பெரம்பூர் பாலத்தில் ரகளை

பெரம்பூர், பெரம்பூர், முரசொலி மாறன் மேம்பாலம் மேல், கடந்த 26ம் தேதி இரவு, வாலிபர்கள் நான்கு பேர் பைக் மீது கேக் வெட்டி, பிறந்தநாளை கொண்டாடினர்.அப்போது பிறந்தநாள் கொண்டாடியோரிடம், அவ்வழியே சென்ற ஆறு பேர் கத்தியை காட்டி மிரட்டி கொண்டிருந்தனர். இதைப்பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றதும், ஆறு பேர் கும்பல், பைக் மற்றும் இரண்டு பட்டாக்கத்திகளை அங்கேயே விட்டு, ஓட்டம் பிடித்தனர்.பிறந்தநாள் கொண்டாடியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பிய நிலையில், தப்பிச் சென்ற ஆறு பேர் கும்பலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ