உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குப்பை தொட்டிகளால் விபத்து அபாயம்

குப்பை தொட்டிகளால் விபத்து அபாயம்

வேளச்சேரி விரைவு சாலை, 200 அடி அகலம் உடையது. தாம்பரம், துரைப்பாக்கம், தரமணி போன்ற பகுதிகளில் இருந்து, கிண்டி, சைதாப்பேட்டை நோக்கி செல்லும் வாகனங்கள், இந்த சாலையில் செல்கின்றன. எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலையில், ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. குப்பை கொட்டுவதற்காக சாலையோரம் வைக்கப்பட்ட தொட்டியை, ஆக்கிரமிப்பாளர்கள், சாலை நடுவே இழுத்து வைத்துள்ளனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், இரவில் கவனக்குறைவாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. குப்பை தொட்டிகளை சாலையோரம் வைத்து, விபத்து அபாயத்தை தடுக்க வேண்டும்.என்.சுப்பிரமணியன், வேளச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ