உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பக்கவாட்டில் மண் சரிவு மேம்பாலத்தில் ஆபத்து

பக்கவாட்டில் மண் சரிவு மேம்பாலத்தில் ஆபத்து

செங்குன்றம்:சென்னை -- ஆந்திர போக்குவரத்திற்கான ஜி.என்.டி., சாலையில், செங்குன்றம், புழல் ஏரி மதகு அருகே, நீர்வள ஆதாரத்துறையின் உபரிநீர் கால்வாய் மீது மேம்பாலம் அமைந்துள்ளது.போக்குவரத்து அதிகமுள்ள இந்த பாலத்தில், ஆந்திராவில் இருந்து மட்டும் தினமும் 100க்கும் மேற்பட்ட லாரிகள், செங்குன்றம் நெல் கிடங்கிற்கு வருகின்றன.கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், இப்பாலத்தின் துாண் அருகே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பாலத்தின் உறுதித்தன்மை பலவீனப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மழை தொடரும் நிலையில், பாலத்தின் இணைப்பு சாலை சேதமடைந்து, போக்குவரத்து துண்டிக்கப்படும் ஆபத்து உள்ளது. மேலும், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், பாலத்தின் இருபக்கமும் 10 கனரக வாகனங்கள் நாள் முழுதும் நிறுத்தப்படுகின்றன.எனவே, விபத்து அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், மாநில தேசிய நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள இந்த மேம்பாலத்தை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை