உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையோர உணவகங்கள் சுகாதாரம் கேள்விக்குறி

சாலையோர உணவகங்கள் சுகாதாரம் கேள்விக்குறி

தாம்பரம், புறநகரில் சமீபகாலமாக சாலையோர உணவகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தாம்பரத்தில் ஜி.எஸ்.டி., சாலை, காந்தி சாலை, ராஜாஜி சாலை, முடிச்சூர் சாலை, கடப்பேரி, கேம்ப்ரோடு, செம்பாக்கம், சானடோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம், வேளச்சேரி சாலை, பம்மல், அனகாபுத்துார் என, எங்கு பார்த்தாலும், இரவில் சாலையோர உணவகங்கள் மற்றும் இறைச்சி கடைகளாகவே உள்ளன.இந்த கடைகளில், தரமான உணவுகள் தயாரிக்கப்படுகின்றனவா என, சோதிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கண்டுகொள்ளாமல் அலட்சியமாகவே உள்ளனர். அவ்வப்போது, பெயருக்காக சில கடைகளில் மட்டும் சோதனை நடத்தி, நடவடிக்கை எடுக்கின்றனர்.சாலையோர உணவகங்களை தொடர்ந்து கண்காணிப்பதோடு, அவற்றை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை