உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லீஸ்க்கு வீடு பார்த்து தருவதாக ரூ.3 லட்சம் மோசடி: 4 பேர் கைது

லீஸ்க்கு வீடு பார்த்து தருவதாக ரூ.3 லட்சம் மோசடி: 4 பேர் கைது

டி.பி. சத்திரம், மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் அமிர்த முருகன்,37. இவர் லீசுக்கு வீடு பார்த்தார். இதற்கான முகநுால் கணக்கில் ரென்டல் மற்றும் லீஸ் வீடு சென்னை என்ற குருப்பில் பதிவு செய்திருந்தார். இவரை அணுகிய சூளை, டி.கே.முதலி தெருவை சேர்ந்த விஜய், 38, என்பவர், வீடு குறித்து பேசியுள்ளார். மற்றொரு செயலி வாயிலாக, கீழ்ப்பாக்கம், கெனால் ரோடு பகுதியில் வீடு ஒன்று காலி இருப்பதை அறிந்து அதன் உரிமையாளரிடம் விஜய் பேசியுள்ளார். அந்த வீட்டை, அமிர்த முருகனுக்கு காட்டியுள்ளார். அமிர்த முருகனுக்கு வீடு பிடித்து போனது.இதையடுத்து முன்பணமாக விஜய் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆகியோருக்கு, ஜி பே செயலி வாயிலாக 3 லட்சம் ரூபாயை அமிர்த முருகன் செலுத்தியுள்ளார். அதன்பிறகு தான் வீட்டின் உரிமையாளர் வேறு ஒருவர் என்பதும், தான் ஏமாற்றப்பட்டதும் அமிர்த முருகனுக்கு தெரிந்தது. இது குறித்து டி.பி சத்திரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விஜய் மற்றும் அவரது கூட்டாளிகள் எழுகிணறை சேர்ந்த ராஜேஷ் டவுரி சோனி,50 திரு நீர்மலையை சேர்ந்த சூர்ய பிரகாஷ்,37 புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன்,35 ஆகியோரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை