மேலும் செய்திகள்
260 கிலோ குட்கா கடத்தியோர் கைது
30-Jul-2024
பூந்தமல்லி, பூந்தமல்லியில், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 10 டன் குட்கா புகையிலை பொருட்களை, போலீசார் நேற்று பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.பெங்களூரில் இருந்து பூந்தமல்லிக்கு, கன்டெய்னர் லாரி வாயிலாக, தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதன்படி நேற்று, சென்னை - --பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி அருகே பாரிவாக்கம் கூட்டுச்சாலை சந்திப்பில், போலீசார் கண்காணித்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த கன்டெய்னர் லாரியை மடக்கி சோதனை செய்தனர்.அதில், மூட்டை மூட்டையாக, 50 லட்சம் ரூபாய் மதிப்புடைய 10 டன் குட்கா புகையிலை பொருட்கள் இருந்தன. இதையடுத்து, குட்காவை பறிமுதல் செய்த போலீசார், திருப்பத்துாரைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் விக்னேஷ்,27, என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இந்த குட்கா கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து, பூந்தமல்லி தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.
30-Jul-2024