உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாடசாலை தெரு ஆக்கிரமிப்பு அளவிடும் பணியால் சலசலப்பு

பாடசாலை தெரு ஆக்கிரமிப்பு அளவிடும் பணியால் சலசலப்பு

மணலி:மணலி மண்டலம் 21வது வார்டு, பாடசாலை தெருவை, தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர். அரசு மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி தொடக்கப்பள்ளி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம், பேருந்து நிலையம், கவுன்சிலர் அலுவலகம் போன்றவை, இச்சாலையை ஒட்டியே செயல்படுகிறது.மணலியின் முக்கிய சாலையான, பாடசாலை தெருவில், 4 கோடி ரூபாய் செலவில், 1 கி.மீ., துாரத்திற்கு கான்கிரீட் சாலை அமைக்கும் பணி துவங்கி நடக்கிறது.வாகன பயன்பாடு மிகுந்த சாலை என்பதால், பாடசாலை தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, விரிவாக்கம் செய்ய வேண்டும் என, 21வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் ராஜேஷ் சேகர், மண்டல குழு கூட்டத்தில் கோரிக்கை வைத்தார்.அதன்படி, திருவொற்றியூர் தாசிலர்தார் சவுந்தரராஜன், தலைமை சர்வேயர் சபரி, மணலி மண்டல அதிகாரிகள் அடங்கிய குழுவினர், ஆக்கிரமிப்புகளை அளவிடும் பணிகளை, நேற்று காலை மேற்கொண்டனர். அப்போது, சாலை ஆக்கிரமிப்புகளை அளவிட்டு, அடையாளப்படுத்தினர்.அதிகாரிகளின் திடீர் ஆய்வு நடவடிக்கை காரணமாக, அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ