உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 35 விமானங்களின் சேவை பாதிப்பு

35 விமானங்களின் சேவை பாதிப்பு

சென்னை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று அதிகாலை வரை விட்டுவிட்டு மழை பெய்தது. இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து, விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை சேவை பாதிக்கப்பட்டது.கோலாலம்பூர், சிங்கப்பூர், கோவா, ஹைதராபாத், கோழிக்கோடு, திருச்சி, பெங்களூரு, மதுரை, கோல்கட்டா, டில்லி உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த 17 விமானங்கள் தரையிறங்க முடியாமல், 30 நிமிடங்கள் வானில் வட்டமடித்தன. அதன் பின் தரையிறக்கப்பட்டன.சென்னையில் இருந்து துபாய், அபுதாபி, கோலாலம்பூர், சிங்கப்பூர், திருவனந்தபுரம் உட்பட பல நகரங்களுக்கு செல்ல வேண்டிய 18 விமானங்கள், இரண்டு மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக புறப்பட்டு சென்றன. விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், 'இடைவிடாமல் மழை பெய்ததால் விமானங்கள் புறப்படுவதிலும், தரையிறங்குவதிலும் சிரமம் ஏற்பட்டது. மழை நின்ற பின், வழக்கம்போல் விமானங்கள் இயக்கப்பட்டன' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை