பாலியல் தொழில் பெண் கைது
சென்னை, விருகம்பாக்கத்தில், அடுக்கு மாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடத்தி வந்த பெண்ணை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கைது செய்து உள்ளனர்.விருகம்பாக்கம், சாய்பாபா காலனி, 3வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். இதில், வளசரவாக்கத்தைச் சேர்ந்த லதா, 50 என்பவர் பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் சிக்கியிருந்த ஒரு பெண்ணை மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.