உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 3 வயது சிறுமிக்கு மறுவாழ்வு அளித்த சிம்ஸ்

3 வயது சிறுமிக்கு மறுவாழ்வு அளித்த சிம்ஸ்

சென்னை, சென்னை, மாதவரத்தைச் சேர்ந்த தம்பதியின் 3 வயது மகள் 'பிபர் சிண்ட்ரோம்' எனும் அரிய வகை மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. வடபழனி 'சிம்ஸ்' மருத்துவமனையில் சிறுமிக்கு அதிநவீன அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து, டாக்டர் சுரேஷ் வீரமணி கூறியதாவது: புதிதாக பிறக்கும் 1 லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்படும். இது, மண்டை ஓடு சாதாரணமாக வளர்வதைத் தடுக்கிறது. இது குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இதனால், குழந்தையின் தலை மற்றும் முகத்தின் வடிவத்தை பாதிக்கிறது.இந்த அரிய வகை நோய் பாதித்த குழந்தைக்கு 'போஸ்டரியர் கிரானியல் வால்ட் டிஸ்டிராக் ஷன்' எனும் நவீன சிகிச்சையை மருத்துவக் குழுவினர் அளித்தனர்.இந்த செயல்முறையானது, மண்டை ஓட்டின் பின் உள்ள எலும்புகளை மிக மெதுவாக நகர்த்துவதற்கு 'கிரானியல் டிஸ்டிராக்டர்ஸ்' எனும் சிறப்பு முறை பின்பற்றப்படும்.இந்த சிகிச்சையால் மண்டை ஓட்டின் உள்ளே உள்ள இடத்தை, குறிப்பிடத்தக்க மறுவடிவமைப்பு மற்றும் விரிவாக்கம் செய்ய முடியயும். மூளையில் இருந்து மண்டை மண்டை ஓடு முழுமையாக பிரிவதின் வாயிலாக சிக்கல்கள் மற்றும் அபாயம் குறைக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !