மேலும் செய்திகள்
விபத்தில் பெண் பலி
28-Feb-2025
எண்ணுார்,எண்ணுாரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன், 48, என்பவர், மகன் பிரபாகரனால் அடித்து கொல்லப்பட்டார் என, எண்ணுார் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் வந்தது.சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரித்து, பிரபாகரனை போலீசார் கைது செய்தனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது:எண்ணுார், சத்தியவாணி முத்து நகரைச் சேர்ந்தவர் முருகன், 48. இவரது மகன் பிரபாகரன், 22; கொத்தனார்.பிரபாகரனுக்கு, சில தினங்களுக்கு முன் காலில் அடிபட்டுள்ளது. மாவுக்கட்டு போடப்பட்டுள்ளதால், நடக்க முடியாமல் ஓய்வு எடுத்து வந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்த முருகன், மது அருந்த பணம் கேட்டு மகன் பிரபாகரனிடம் தகராறு செய்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.ஒருகட்டத்தில், முருகன் அருகேயிருந்த சுத்தியலை எடுத்து, மகனை தாக்க முயன்றுள்ளார். சுதாரித்த பிரபாகரன், சுத்தியலை பிடுங்கி, ஆத்திரத்தில் தந்தையை தாக்க, அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார். உடனே பிரபாகரன், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் வந்து பரிசோதித்தபோது முருகன் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, தேம்பி அழுதபடி பிரபாகரன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து சரணடைந்தார்.இவ்வாறு போலீசார் கூறினார்.
28-Feb-2025