உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அழகுசாதன பொருட்கள் தயாரிக்க சிறப்பு பயிற்சி

அழகுசாதன பொருட்கள் தயாரிக்க சிறப்பு பயிற்சி

சென்னை, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், மூலிகை அழகு சாதனப் பொருட்கள் மற்றும் தோல் பராமரிப்பு பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி, சென்னையில் நடக்க உள்ளது.இந்த பயிற்சியானது, வரும் 7ம் தேதி துவங்கி, 9ம் தேதி வரை, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.இதில் மூலிகை சோப்பு, சோப்பு தயாரித்தல், பேஸ் வாஷ் ஜெல், பொடுகு எதிர்ப்பு ஷாம்பு, பாடி லோஷன், பேஸ் கிரீம், லிப் பாம் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகளும், வழிமுறைகளும் பயிற்றுவிக்கப்பட உள்ளன.பங்கேற்க விரும்புவோர், www.editn.inஎன்ற வலைதளத்தில் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.கூடுதல் விபரங்களுக்கு சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் அல்லது 86681 02600, 70101 43022, 86681 00181 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ