உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இலங்கை வி மான சேவைகள் ரத்து

இலங்கை வி மான சேவைகள் ரத்து

சென்னை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணியர் விமானம், இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து தினமும் அதிகாலை 3:00 மணிக்கு, சென்னையை வந்தடையும். சென்னை விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 4:00 மணிக்கு, இலங்கைக்கு செல்லும்.அதேபோல், மதியம் 2:10 மணிக்கு வரும் ஸ்ரீலங்கன் விமானம், மாலை 4:05 மணிக்கு, இலங்கைக்கு செல்லும். இந்த 2 வருகை, 2 புறப்பாடு என, நான்கு விமான சேவைகளை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், நிர்வாக காரணங்களுக்காக நேற்று ரத்து செய்தது.இதனால், இலங்கைக்கு செல்லும் பயணியர் மட்டுமின்றி, ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேஷியா, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் டிரான்சிட் பயணியரும் பாதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை