உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கே.கே.நகர் எஸ்.ஐ.,க்கு நட்சத்திர காவல் விருது

கே.கே.நகர் எஸ்.ஐ.,க்கு நட்சத்திர காவல் விருது

சென்னை, காவல் துறையில், ஒவ்வொரு மாதமும் சிறப்பாக பணிபுரியும் அதிகாரி அல்லது போலீசாரை தேர்ந்தெடுத்து, நட்சத்திர காவல் விருது வழங்கப்பட்டு வருகிறது.நட்சத்திர விருதுக்கு தேர்வுசெய்யப்படுவோருக்கு, 5,000 ரூபாயும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, பிப்ரவரி மாதம் நட்சத்திர காவல் விருதுக்காக கே.கே.நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவரை, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட், நேற்று நேரில் அழைத்து, 5,000 ரூபாய் வெகுமதியும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.கடந்த, 2018ல் கல்லுாரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றவாளி அழகேசனுக்கு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்ததற்காக, நட்சத்திர காவல் விருது அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி