உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் ரகுராம், செலினா தீப்தி சாம்பியன்

மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் ரகுராம், செலினா தீப்தி சாம்பியன்

சென்னை, தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில், ஐந்தாவது மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டி, ஐ.சி.எப்., அரங்கில் நடந்தது. இதில், ஆண்கள், பெண்கள் மற்றும் 19, 17, 15, 13, 11 வயதுக்குட்பட்டோர், கார்பரேட், வெட்ரன் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. ஆண்கள் பிரிவில், வின்வின் அகாடமி ரகுராம், பெண்களில் வருமான வரித்துறையின் செலினா தீப்தி ஆகியோர் முதலிடங்களை பிடித்தனர்.அதேபோல், 19 வயதில் சென்னை அச்சீவர்ஸ் அபிநந்த், சிறுமியரில் சி.டி.டி.எப்., அகாடமியின் ஷ்ரியா, 17 வயதில் சென்னை அபிநந்த் மற்றும் எம்.வி.எம்., அகாடமியின் நந்தினி ஆகியோர் முதலிடங்களை கைப்பற்றினர்.அதேபோல், 15 வயதில், ஜவஹர் டி.டி.ஏ., அகாடமியின் ஆகாஷ், சிறுமியரில் சென்னை அச்சீவர்ஸ் அனன்யா, 13 வயதில் ஜவஹர் டி.டி.ஏ., அகாடமியின் சஞ்சய் அர்விந்த், சிறுமியரில் தேனி பூஜா ஆகியோர் வென்றனர். மேலும், 11 வயதில் எஸ்.கே. அகாடமியின் தனிஷ் மற்றும் எஸ்.எஸ்.டி., அகாடமி பிரத்திகா ஆகியோர் வெற்றி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ