உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நீரில் மூழ்கி மாணவர் இறப்பு

நீரில் மூழ்கி மாணவர் இறப்பு

பள்ளிக்கரணை, பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் தீபக், 18. வேளச்சேரி குருநானக் கல்லுாரி மாணவர். நேற்று மதியம் 12.30 மணிக்கு, தன் நண்பர்களுடன் சேர்ந்து, பள்ளிக்கரணை அணை ஏரியில் குளிக்கச் சென்றார்.ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்ற தீபக், நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். சிறிது நேரத்தில் அவரை காணவில்லை.இதுகுறித்து நண்பர்கள்அளித்த தகவல்படி, பள்ளிக்கரணை போலீசார், வேளச்சேரி தீயணைப்பு துறையினர் வந்தனர்.படகு வாயிலாக, தீபக் குளித்த பகுதிக்கு சென்று தேடினர். ஆனால், உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, மெரினா ஸ்கூப்பிங் டைவிங் பிரிவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், ஏரி நீரில் மூழ்கி, தீபக் உடலை கண்டுபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை