சுற்றுச்சூழல் கண்காட்சி மாணவர்கள் அசத்தல்
சென்னை:தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையின், தேசியப் பசுமைப் படை மாணவர்கள் பங்கேற்ற, வாழ்வியல் முறைகளை பின்பற்றுதல் தொடர்பான கண்காட்சி, வேப்பேரி பெண்டிங்க் மகளிர் பள்ளி வளாகத்தில் நடந்தது.மொத்தம் 70 அரசு, மாநகராட்சி, அரசு உதவிப் பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர்கள், தங்கள் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.சூரிய ஒளி பயன்பாடு, இயற்கை விவசாயம், மூலிகைத் தோட்டம், பிளாஸ்டிக் தவிர்ப்பு, மின்னணுக் கழிவுகள் மேலாண்மை உள்ளிட்ட தலைப்புகளில் 160 காட்சிப்பொருட்களை, மாணவர்கள் விளக்கினர். பள்ளிக்கல்வித் துறை உதவி இயக்குநர் சிவதாஸ் மற்றும் மாவட்ட உயர் அலுவலர்கள் பங்கேற்று, சிறந்த படைப்புகளுக்கு, 35,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கினர்.விருகம்பாக்கம் அரசு பள்ளி, அரும்பாக்கம் மாநகராட்சிப் பள்ளி மற்றும் எஸ்.பி.ஓ.ஏ., ஆகிய பள்ளிகள், முதல் மூன்று பரிசுகள், சான்றிதழ்கள் பெற்றன. பங்கேற்ற அனைவருக்கும் மஞ்சப்பை, மூலிகைச் செடி, ஆரஞ்சுப் பழம் வழங்கப்பட்டது.