உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்சார ரயிலின் ஜன்னல்களில் நின்றபடி மாணவர்கள் சாகச பயணம்: பயணியர் அச்சம்

மின்சார ரயிலின் ஜன்னல்களில் நின்றபடி மாணவர்கள் சாகச பயணம்: பயணியர் அச்சம்

சென்னை, சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களில், எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.காலை மற்றும் மாலையில் அலுவலக நேரங்களில் கூட்டம் அலைமோதுகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சிலர், மின்சார ரயில்களின் படியில் தொங்கியபடியும், ரயிலின் ஜன்னல் பகுதியில் நின்று கொண்டும் சாகச பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று காலை 8:15 மணிக்கு, திருவள்ளூர் - சென்னை சென்ட்ரல் மின்சார ரயிலில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஏறினர்.பின், அவர்கள் ரயிலின் ஜன்னல் பகுதிகளில் நின்று கொண்டு, படிகளில் ஏறியும், கூச்சலிட்டவாறும் பயணம் செய்தனர். 'பச்சையப்பா கல்லுாரி மாஸ்...' என சத்தம் போட்டுக் கொண்டு வந்தனர். இது, பயணியர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.இதுகுறித்து ரயில் பயணியர் கூறியதாவது:மின்சார ரயிலின் படி, ஜன்னலில் தொங்கியபடி, கூரையில் ஏறி சில மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்வது, பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது. ஒரே நேரத்தில் 30க்கும் மேற்பட்டோர் கூச்சலிட்டு கொண்டு பயணம் செய்வது, பயணியர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டிய மாணவர்கள், பயணியருக்கு இடையூறு செய்வது வேதனை அளிக்கிறது. பெரும்பாலான ரயில் நிலையங்களில் காவலர்களும் இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து, ரயில்வே போலீசார் கூறுகையில், 'ரயில் பயணத்தின் போது சக பயணியருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள கூடாது.'தொடர்ந்து விதிமீறல்கள், வன்முறையில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

a natanasabapathy
ஜூலை 19, 2024 18:50

இதெல்லாம் platform case. திருத்த முடியாது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூலை 19, 2024 17:53

ஒவ்வொருமுறை இது நடக்கும்போதும் ரயில்வே காவல்துறையினர் சும்மா மேம்போக்காக கடந்து செல்கின்றனர். ஏன் தப்பு செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாட்டேங்குறாங்க என்று தெரியவில்லை. இதனால் பயணிகள் குறிப்பாக பெண் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாக நேரிடுகிறது. இங்கே தப்பு செய்பவர்களுக்கு இருக்கும் மனித உரிமைகள் சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு இல்லை. முதல்வர் வீட்டிலோ பிரதமர் வீட்டிலோ சென்று இப்படி சத்தம் போட முடியாது என்ற மமதையில் சாதாரண பொது மக்களின் வலி அவர்களுக்கு தெரியவில்லை.


Chand
ஜூலை 19, 2024 15:55

இது தான் திராவிட மாடல்


Navnirmaan Samrakshana
ஜூலை 19, 2024 14:49

பொது இடங்களில் இதுபோன்ற நடத்தை வன்மையாக கண்டிப்பதுடன் கடுமையாக தண்டிக்கப்படவும் வேண்டும். இப்போதெல்லாம், மச்சி-மாமு என்று அழைத்துக் கொண்டு கூச்சல் போட்டு பொதுமக்களுக்கு தலைவலியாக இருக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் ரவுடி கும்பல்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்ன..நம்ம கல்வி முறையின் லட்சணம் அப்படி


Rajarajan
ஜூலை 19, 2024 14:39

இந்த அழகில், தனியார் நிறுவங்களில் இடவொதுக்கீடு வந்தால் ??


GNANAM
ஜூலை 19, 2024 13:15

6 மாதம் வீட்டில் ஒய்வு எடுக்கும் படி மாவுக்கட்டு போட்டுவிட்டால் சாகசம் பண்ண யாருக்கும் தோணாது


வாய்மையே வெல்லும்
ஜூலை 19, 2024 11:27

அடங்காத மாணவர்கள் முன்பக்கம் பின்பக்கம் நீட்டிக்கொண்டு இருக்கும் வேண்டாத வாழை அறுத்து எறியவும்.. கண்டிப்பா முறைப்படுத்தலாம் .. இப்படி தொங்கிட்டு போவது கடின குற்றத்திற்கு சமம் இவர்களை இப்படியே வளரவிட்டால் நாடு தாங்காது .


murthy c k
ஜூலை 19, 2024 10:15

இதை எந்த ரயில்வே அதிகாரியும் பார்க்கவில்லையா இல்ல ரயில்வே போலீஸ் பார்க்க வில்லையா, உள்ள கொண்டு பொய் முட்டிக்கு முட்டி தட்டி 3 ஆண்டுகள் வைக்கணும் காலேஜ் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும்


Ravichandran S
ஜூலை 20, 2024 15:37

கவலையே வேண்டாம் அவங்களே அடிபட்டு கீழ விழுந்துடுவாங்க


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை