மேலும் செய்திகள்
அச்சிறுபாக்கம் சாலையில் மண் குவியலால் அச்சம்
23-Aug-2024
பூந்தமல்லி - --பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி தினமும், ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. பூந்தமல்லி அருகே திருமழிசை சிட்கோ, இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதுார் பகுதியிலுள்ள சிப்காட் தொழிற்சாலைகளால், இந்த சாலையில் வாகன போக்குவரத்து மேலும் அதிகரித்துள்ளது.இந்த சாலையில் பூந்தமல்லி, நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், தண்டலம், இருங்காட்டுக்கோட்டை பகுதியில், மண் குவியல் அதிக அளவில் குவிந்துள்ளது.இதனால், வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திச் செல்லும் போது, மண் குவியலில் சக்கரங்கள் சிக்கி ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் மண் குவியலால், அதிக அளவில் விபத்தில் சிக்குகின்றனர். இந்த சாலையில் உள்ள மண் குவியல்களை அகற்ற வேண்டும்.- சூரஜ்குமார், 27, பூந்தமல்லி.
23-Aug-2024