உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வியர்க்க வைக்கும் ஏசி பஸ்கள் ஜன்னலும் திறக்காததால் அவதி

வியர்க்க வைக்கும் ஏசி பஸ்கள் ஜன்னலும் திறக்காததால் அவதி

சென்னை, சென்னை மாநகர, 'ஏசி' எனப்படும் குளிர்சாதன வசதியுடன் இயக்கப்படும் பல பஸ்களில், 'ஏசி' சாதனம் சரிவர இயங்காததால் குளிர்ச்சியான சூழல் கிடைப்பதில்லை. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தாம்பரம் - பிராட்வே, பிராட்வே - திருப்போரூர், திருவான்மியூர் - தாம்பரம், கோயம்பேடு - சிறுசேரி உள்ளிட்ட வழித்தடங்களில், குளிர்சாதன வசதியுடன் 'ஏசி' பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் ஆரம்ப கட்டணம் 15 ரூபாய். பல பேருந்துகளில், 'ஏசி' சரிவர இயங்கவில்லை. கதவுகள் மட்டுமின்றி, ஜன்னல்களும் மூடப்பட்டு இருப்பதால், காற்று கிடைக்காமல் வியர்த்து கொட்டி பயணியர் அவதிப்படுகின்றனர்.இதனால் நடத்துனர்களுடன் வாக்குவாதம் செய்யும் நிலை தொடர்கிறது. நேற்று, திருப்போரூர் - பிராட்வே வழித்தடத்தில் இயக்கிய, 102 ஏசி பேருந்தில் புழுக்கம் காரணமாக அவதிப்பட்ட பயணியர், பேருந்தின் ஜன்னலையாவது திறக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.'ஏசி' இயங்காததால், சாதாரண கட்டணம் வசூலிக்குமாறும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து பயணியர் கூறியதாவது:மற்ற பேருந்துகளை விட, ஏசி பேருந்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வெயில், வெப்பம் காரணமாக கூடுதல் கட்டணம் செலுத்தி ஏசி பேருந்தில் பயணம் செய்கின்றனர்.ஆனால், ஏசி இயங்குவதில்லை. ஜன்னலையும் திறக்க முடியாததால் மூச்சு திணறல் ஏற்படுகிறது. ஏசி சரியாக இயங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, பேருந்து ஊழியர்கள் கூறுகையில், 'ஏசி பேருந்துகளில் ஜன்னல்களை திறக்க முடியாது. பயணியர் அதிகரிக்கும் போது, வெப்பமும் அதிகரிக்கும்.இதனால், ஜன்னலை ஒட்டி துணியால் திரையிடாததால், வெப்பம் ஊடுருவி, ஏசி காற்றை ஈர்த்து விடுகிறது. இதனால், பேருந்துக்குள் போதுமான குளிர் நிலை இருப்பதில்லை' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ethiraj
ஜூலை 28, 2024 21:06

Maintenance of AC to be given to manufacturer of the AC unit irrespective of cost for first 100onths. Giving it for low quotation or trying to maintain by staff is total failure Driver conductor must stop the bus and ask passenger to go in someother bus


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி