உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இழுபறியில் தாம்பரம் - வேளச்சேரி சாலை விரிவாக்கம் மின்கம்பங்களை அகற்றாததால் பணி கிடப்பில்

இழுபறியில் தாம்பரம் - வேளச்சேரி சாலை விரிவாக்கம் மின்கம்பங்களை அகற்றாததால் பணி கிடப்பில்

தாம்பரம், தாம்பரம் - வேளச்சேரி சாலை, ஜி.எஸ்.டி., சாலைக்கு நிகரானது. இச்சாலை கிழக்கு தாம்பரத்தில் துவங்கி சேலையூர், கேம்ப்ரோடு, செம்பாக்கம், வேங்கைவாசல், மேடவாக்கம், பள்ளிக்கரணை வழியாக வேளச்சேரியை அடைகிறது. இதன் நீளம் 16.3 கி.மீ.,ஜி.எஸ்.டி., சாலைக்கு மாற்றாக விளங்குவதால், கிழக்கு தாம்பரத்தில் இருந்து, இச்சாலை வழியாக சென்னையின் பல்வேறு இடங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக, போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது.வாகன எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, 1992ம் ஆண்டு ஒருவழி பாதையாக இருந்த இச்சாலை, நான்கு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, நில எடுப்பு காரணமாக பல இடங்களில் விரிவாக்க பணி நடக்கவில்லை.அதன்பின், படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அதிகரித்து வரும் வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி, சில ஆண்டுகளாக நடந்து வருகிறது.போதிய இடவசதி உள்ள இடங்களில், விரிவாக்கப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கிழக்கு தாம்பரம் முதல் மேடவாக்கம் வரை, இன்னும் பல இடங்களில் சாலை விரிவுப்படுத்தப்படாமல் உள்ளது.சேலையூர் முதல் காமராஜபுரம் வரை, இருபுறமும் மின் கம்பங்களை அகற்றாமல், சாலையை அகலப்படுத்தி, ஜல்லிக் கற்கள் கொட்டி அப்படியே விட்டு விட்டனர்.அந்த பணி இன்னும் நிறைவடையாத நிலையில், தற்போது சேலையூரில் மின் கம்பங்களை அகற்றாமல், சாலையை அகலப்படுத்த பள்ளம் தோண்டுகின்றனர். மேலும், பணி நடக்கும் இடத்தில், பெயரளவுக்கே பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.இப்படியே ஒவ்வொரு இடத்திலும், மின் கம்பங்களை அகற்றாமல், சாலையை அகலப்படுத்தி ஜல்லிக்கற்கள் கொட்டினால் மட்டும் போதுமா? கம்பங்களை அகற்றி சாலை அமைப்பது எப்போது என, வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.மேலும், அதிகாரிகளின் அலட்சியமே பணிகள், 'ஜவ்வு' போல் இழுத்துக் கொண்டே செல்வதற்கு காரணம் என்றும் புகார் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை