மேலும் செய்திகள்
மத்திய அரசு அலுவலக அணி காவல் ஹேக்கத்தானில் வெற்றி
3 hour(s) ago
போதைக்கு எதிராக மாணவியர் விழிப்புணர்வு
3 hour(s) ago
ஜதியில் ஜொலித்த சஹானா
3 hour(s) ago
நாசாவின் சர்வதேச போட்டியில் ஈஸ்வரி கல்லுாரி சாதனை
3 hour(s) ago
குன்றத்துார், பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுவதை கருதி, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி விற்பனை செய்வோரிடம், அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.எனினும், நகரம், கிராமம் என, அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளன. பயன்படுத்திவிட்டு துாக்கியெறியும் பிளாஸ்டிக் பொருட்கள், நீர்லைகளில் அடைத்து கொள்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது; நீரோட்டத்திற்கும் தடைபடுகிறது.இதை தடுப்பதற்கும், பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து, வேறு பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தவும், அரசு பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை புறநகரில் உள்ள குன்றத்துார் ஒன்றியம் படப்பை ஊராட்சியில், பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்யும் திட்டங்கள் 2022ல் கொண்டு வரப்பட்டன.இத்திட்டத்தின் கீழ், துாய்மை பணியாளர்கள் சேகரிக்கும் குப்பையை மக்கும், மக்காதவையாக தரம் பிரித்து, மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரமாக மாற்றப்பட்டது.மக்காத குப்பையான பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கவர்கள், அரவை இயந்திரத்தில் அரைத்து துகல்களாகப்பட்டது.அவற்றை, படப்பையில் உள்ள காந்த வெப்ப சிதைவு இயந்திரக்கூடத்தில் காந்த சக்தி வாயிலாக தினம் 5 டன் குப்பை கழிவுகளை சாம்பலாக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. படப்பையில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம், கைமேல் பலன் கிடைத்தது. அரவை இயந்திரத்தில் துகல்களாக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்திற்கு, கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனால், அரசுக்கு வருவாய் கிடைத்தது.இந்த திட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை கிலோ 10 ரூபாய்க்கு வாங்கி, இவற்றை அரைத்து தார்சாலை அமைக்க 40 ரூபாய்க்கு விற்கப்பட்டது.சாலையில் சிதறி கிடக்கும் குப்பையை சேகரித்து, அவற்றையும் அரைத்து சாலை அமைக்க வழங்கிய இத்திட்டம், பலரது கவனத்தை ஈர்த்தது.மேலும், காந்த வெப்ப சிதைவு இயந்திரத்தில் தினம் 5 டன் குப்பை கழிவுகளை சாம்பலாக்க முடியும் என்பதால், சென்னை புறநகரில் சேகரமாகும் குப்பை, படப்பைக்கு எடுத்து சென்று எளிதாக அகற்றலாம் என எதிர்பார்க்கப்பட்டது.படப்பையில் செயல்படுத்தப்பட்ட திட்டத்தை, தமிழக முழுவதும் அமல்படுத்தி குப்பை பிரச்னைக்கு தீர்வு காணலாம் எனவும், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்தனர். துவக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட இந்த திட்டம், தற்போது பயன்பாடின்றி மூடியே கிடக்கிறது.இதனால், பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட முன்ணுதாரனம் திட்டம், தற்போது வீணாகியுள்ளது.இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஒரகடத்தில் உள்ள 'ரெனால்டு நிசான்' கார் தொழிற்சாலையின் சி.எஸ்.ஆர்., நிதி வாயிலாக 61 லட்சம் ரூபாய் மதிப்பில், காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே படப்பை ஊராட்சியில் முதல் முறையாக காந்த வெப்ப சிதைவு இயந்திரம் கூடத்தை அமைத்து கொடுத்தது. இந்த இயந்திரம் எண்ணெய், டீசல், மின்சாரம், நிலக்கரி ஆகிய எரிபொருள் இல்லாமல், காந்த சக்தி வாயிலாக ஏற்படும் வெப்பத்தால் குப்பையை சாம்பலாக்கும். இந்த இயந்திரத்தில் 200 கிலோ குப்பையை உள்ளீடு செய்தால், ஒரு கிலோ சம்பல் கழிவுகள் மட்டும் வெளிவரும். தினம் 5 டன் குப்பை வரை இந்த இயந்திரத்தில் அழிக்க முடியும் என அறிவிக்கப்பட்டது. 15வது நிதிக்குழு மானிய நிதியில் இருந்து 36 லட்சம் ரூபாய் மதிப்பில், படப்பையில் பிளாஸ்டிக் அரவை கூடம் அமைக்கப்பட்டது. இங்கு அரைக்கப்பட்ட 1,300 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை, தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்திற்கு கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருவாய் ஈட்டப்பட்டது. இந்த துகல்கள் தார் சாலை அமைக்கப் பயன்படுத்தப்பட்டது. படப்பை ஊராட்சியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் இயற்கை உரம் தயாரிக்கும் நுண்ணுயிரி கூடம் அமைக்கப்பட்டது. இங்கு படப்பை ஊராட்சியில் சேகரமாகும் காய்கறி கழிவுகளை கொண்டு, இயற்கை உரம் தயாரிக்கப்பட்டது. இந்த மூன்று திட்டங்களும் தற்போது பயன்பாடின்றி மூடி கிடக்கிறது.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago