உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வேளச்சேரி வெள்ள பாதிப்புக்கு காரணம் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட கமிஷனர்

வேளச்சேரி வெள்ள பாதிப்புக்கு காரணம் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட கமிஷனர்

வேளச்சேகடந்தாண்டு பருவமழை வெள்ளத்தில், வேளச்சேரி பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. இப்பகுதியை, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், நேற்று ஆய்வு செய்தார்.சதுப்பு நிலம் செல்லும் நீர்வழிப்பாதைகள், அதில் உள்ள ஆக்கிரமிப்புகள், குப்பை கொட்டுவது உள்ளிட்ட பிரச்னைகளை பார்த்தார்.வேளச்சேரி அன்னை இந்திரா நகர் உள்ளிட்ட நலச்சங்கத்தினர், சில கோரிக்கைகள் வைத்தனர்.குறிப்பாக, வேளச்சேரி - பெருங்குடி ரயில்வே சாலை, அதில் உள்ள வடிகால் கட்டமைப்புகள் ரயில்வே நிர்வாகத்திடம் இருப்பதால், மாநகராட்சியால் பராமரிப்பு செய்ய முடியாத நிலை குறித்து தெரிவித்தனர்.மேலும், வடிகால் பகுதியை கையகப்படுத்தி, நீரோட்ட பாதைகளை சரி செய்ய வேண்டும் என, அவர்கள் கூறினர்.அதற்குரிய ஆவணங்கள், புகைப்படங்களை பார்த்து, அதிகாரிகளிடம் கமிஷனர் விளக்கம் கேட்டார்.பின், ரயில்வே சாலை விரைவில் மாநகராட்சி வசம் வரும். பருவமழைக்கு முன், நீரோட்டத்தை சீராக்கி, வெள்ள பாதிப்பு இல்லாத வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என, நலச்சங்கத்தினரிடம் கூறினார்.சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு கமிஷனர் வரும்போதும், வேளச்சேரியை பார்வையிட்டு, முந்தைய பாதிப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டு, இதுபோல் பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சில ஆலோசனைகள் வழங்குவர்.அதேபோல் இந்த ஆய்வும் இருக்கக்கூடாது என, அப்பகுதியினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை