உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குப்பை தொட்டியில் 5 சவரன் நகை தேடிப்பிடித்து ஒப்படைத்த ஊழியர்

குப்பை தொட்டியில் 5 சவரன் நகை தேடிப்பிடித்து ஒப்படைத்த ஊழியர்

அடையாறு, பட்டினம்பாக்கம், சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் ரவி, 48. துாய்மை பணியாளர். நேற்று, ஆர்.ஏ.,புரம், ராஜா தெருவில் பேட்டரி வாகனத்தில் வீடுகளில் இருந்து குப்பை சேகரித்தார். பின், அந்த குப்பையை, சாலையோரம் உள்ள பெரிய தொட்டியில் கொட்டினார். அதே பகுதியில் தோரகா அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ஜெயந்தி, 58. இவர், வீட்டை பெருக்கி குப்பை அள்ளும்போது, கீழே விழுந்து கிடந்த பர்சையும் குப்பையுடன் சேர்த்து, பேட்டரி வாகனம் வந்த போது அதில் கொட்டி விட்டார்.இதுகுறித்து அறிந்து, குப்பை கொட்டும்போது அதில் ஒரு பர்சும் சேர்ந்து விட்டது. அதில் நகை உள்ளது' என ரவியிடம் கூறினார். அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து அவர்கள் அனுமதியுடன், குப்பை தொட்டியை கவிழ்த்து அதில் நகையை ரவி தேடினார். அதில் பர்ஸ் கிடைத்தது. அதில் 5 சவரன் நகை இருந்தது.நகையை மீட்க உதவிய ரவியை, ஜெயந்தியின் குடும்பத்தார் மற்றும் உர்பேசர் சுமித் ஊழியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ