உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சுடுகாட்டில் மாந்திரீகம் இறந்தவரின் கணவர் புகார்

சுடுகாட்டில் மாந்திரீகம் இறந்தவரின் கணவர் புகார்

ஓட்டேரி, புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம், 80. இவரது மனைவி ஜோதிலட்சுமி உடல் நலமின்றி கடந்த 10ம் தேதி காலமானார்.இவரது உடல் ஓட்டேரி சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. நேற்று 16ம் நாள் காரியம் செய்ய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சென்றனர். ஜோதிலட்சுமி புதைக்கப்பட்ட இடத்தில் பன்றி, கோழி ஆகியவற்றை அறுத்து, மாந்திரீகம் செய்த தடயம் இருந்துள்ளது. இதையடுத்து ஜோதிலட்சுமியின் கணவர் கல்யாண சுந்தரம் அளித்த புகாரின்படி, தலைமைச் செயலக காலனி போலீசார் விசாரித்தனர். சுடுகாட்டில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளை பார்வையிட்ட போது, 21ம் தேதி அதிகாலை 1:00 மணியளவில் காவலாளி தாமோதரன் மற்றும் மயான ஊழியர் ராஜேஷ் ஆகியோர், சுடுகாட்டிற்கு காரில் வந்த சிலருக்கு, கதவை திறந்து விட்டது பதிவாகி இருந்தது.காரில் வந்த நபர்களிடம், 5,000 ரூபாய் பெற்றுக் கொண்டு மாந்திரீகம் செய்ய சுடுகாட்டு உள்ளே விட்டது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி