உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஐவர் ரக்பி டிரஸ்ட் அணி முதலிடம்

ஐவர் ரக்பி டிரஸ்ட் அணி முதலிடம்

சென்னை, தமிழ்நாடு ரக்பி கால்பந்து யூனியன், ஐவர் மட்டும் பங்கேற்கும் ரக்பி கால்பந்து போட்டியை, திருவான்மியூரில் நேற்று முன்தினம் நடத்தியது.'கிளப்'களுக்கான இப்போட்டியில் இருபாலரிலும் தலா எட்டு அணிகள் பங்கேற்றன.முதல் அரையிறுதியில் நாடன் ஷார்க்ஸ் அணி, லேடி சிவசாமியையும், டிரஸ்ட் அணி, சென்ட்ரல் அணியையும் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. பெண்களுக்கான இறுதிப் போட்டியில், டிரஸ்ட் மற்றும் நாடன் ஷார்க்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டியில், 20 - 15 என்ற கணக்கில், டிரஸ்ட் அணி வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்தது.ஆண்களில், நாடன் ஷார்க்ஸ் அணி முதலிடத்தையும், செயின்ட் ஆண்டனி கிளப் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு, கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை