உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மழைநீர் வடிகால் துார்வாரும் பணிகள் செப்டம்பருக்குள் முடிக்க மேயர் உத்தரவு

மழைநீர் வடிகால் துார்வாரும் பணிகள் செப்டம்பருக்குள் முடிக்க மேயர் உத்தரவு

சென்னை, சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மேயர் பிரியா தலைமையில் ஆய்வு கூட்டம், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.கூட்டத்தில் கமிஷனர் ராதாகிருஷ்ணன், துணை கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மேயர் பிரியா கூறியதாவது:கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் 767 கி.மீ., நீளத்திலான மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில், 558.41 கி.மீ.,க்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அதேபோல், கோவளம் வடிநில பகுதிகளில், 160.54 கி.மீ., நிளத்தில் 116.54 கி.மீ., பணிகளும், மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் 43.05 கி.மீ., பணிகளில் 39.26 கி.மீ., என, 714.21 கி.மீ., மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.அதேபோல், 792 கி.மீ., நீளத்தில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் துார்வாரும் பணியில் 226 கி.மீ.,க்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மாம்பலம் கால்வாயில் 3.06 கி.மீ., பணிகளில் 2.88 கி.மீ.,க்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.மேலும், 238.55 கோடி ரூபாய் மதிப்பில், 275.40 கி.மீ., நீளத்தில் 1,398 சாலை பணிகளை, மக்களுக்கு இடையூறின்றி பழைய சாலைகளை அகழ்ந்தெடுத்து உடனடியாக சாலை அமைக்கும் பணிகளை முடிக்க வேண்டும்.சென்னையில் அதிகமான மழைபொழிவு ஏற்படும் என்ற நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், மழைநீர் வடிகால் பணிகளையும், இணைப்பு இல்லாத இடங்களில் இணைப்பு பணிகள், துார்வாரும் பணிகள் உள்ளிட்டவற்றை செப்., மாதத்திற்குள் முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை