உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மருமகனுடன் வசித்த மாமியார் கொலை

மருமகனுடன் வசித்த மாமியார் கொலை

திருவான்மியூர், திருவான்மியூர், ரங்க நாதபுரத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன், 40; கார்பென்டர். இவரது மனைவி தீபா, 38. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன், தீபாவின் தாய் பொன்னி, 58, வசித்து வந்தார்.தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் தீபா, குழந்தைகளுடன் மூன்று ஆண்டுகளாக, பெசன்ட்நகரில் தனியாக வசித்து வருகிறார்.அய்யப்பனும், பொன்னியும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். நேற்று காலை, அய்யப்பன் வேலைக்குச் சென்றார். இரவு வீடு திரும்பிய போது, பொன்னி கழுத்தில் வெட்டுக் காயத்துடன், கொலை செய்யப்பட்டு கிடந்தார்.திருவான்மியூர் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, அய்யப்பன், தீபாவிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை