உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களில் தொடரும் நெட்வொர்க் பிரச்னை

சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களில் தொடரும் நெட்வொர்க் பிரச்னை

சென்னை, மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் மொபைல்போன் சிக்னல் அடிக்கடி தடைப்படுவதால், பயணியர் வாட்ஸாப் போன்ற ஆன்லைன் வாயிலான டிக்கெட் பெறுவதில் சிரமப்படுகின்றனர்.சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இரண்டு வழித்தடங்களில் தற்போது 54.65 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், 26.5 கி.மீ., துாரம் சுரங்கப்பாதை வழியாக மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் இன்றி விரைவாக செல்ல மெட்ரோ ரயில் வசதியாக இருப்பதால், பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டிக்கெட் கவுன்டர்களில் நெரிசலை தவிர்க்க இணையதளம் வசதியுடன், மொபைல்போன் செயலிகள் வாயிலாக டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, டிக்கெட் எடுத்து பயணம் செய்ய வசதியாக இருக்கிறது. இருப்பினும், சுரங்கப்பாதை மெட்ரோ ரயிலில் மொபைல்போன் சிக்னல் அடிக்கடி தடை படுவதால், ஆன்லைனில் உடனடியாக டிக்கெட் எடுக்க முடியவில்லை. இதனால், பயணியர் அவதிப்படுகின்றனர். இது குறித்து மெட்ரோ ரயில் பயணியர் சிலர் கூறியதாவது: சென்னையில் பல்வேறு இடங்களுக்கும் சென்று வர, மெட்ரோ ரயில் வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் செல்லும் போதெல்லாம், மொபைல்போன் சிக்னல் தடைப்பட்டு, நெட்வொர்க் பிரச்னை ஏற்படுகிறது. போனில் வரும் அவசர அழைப்புகளையும் ஏற்று பேச முடியாத நிலை ஏற்படுகிறது. தற்போது, மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் எடுக்கும் வசதி இருக்கிறது. இதேபோல், காகித பயன்பாட்டை குறைக்க, கவுன்டர்களில் வாட்ஸாப் வாயிலாக டிஜிட்டல் டிக்கெட் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், நெட்வொர்க் பிரச்சினை இருப்பதால், மேற்கண்ட வசதிகளை சில நேரங்களில் பயணியர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை